விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Y100 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Y200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்ட் ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. விவோ Y200 அம்சங்கள்:6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்அட்ரினோ GPU8 ஜி.பி. ரேம்128 ஜி.பி. மெமரிமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதிடூயல் சிம் ஸ்லாட்ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 1364MP பிரைமரி கேமரா, OIS2MP போர்டிரெயிட் கேமரா16MP செல்ஃபி கேமராஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்விவோ Y200 ஸ்மார்ட்போன் ஜங்கில் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.