நீரானது உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. இந்த ஆண்டு பல அத்தியவசியமான வளங்களை கொண்டாடும் வகையில் உலக உணவு தினத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, அதன் முன்னேற்றத்தின் பெரும் பாகத்திற்கு நீர் வளமானது மிக முக்கிய கூறாக எதிரொலிக்கிறது.
மேலும் நீர் கிடைக்காத நிலையில் ஏற்படும் காலநிலை மாற்றமானது வெப்பநிலையை அதிகரிப்பதுடன் மழைவீழ்ச்சிப் போக்குகளை சீர்குலைப்பதால் நீர்நிலைகள் வறண்டு போகின்றன.
அத்துடன், வளர்ந்து வரும் மக்கள் தொகையானது நீர் மட்டத்தை அதிகரிக்கவிடாது அழுத்தத்தை கொடுப்பதால் நாடு தொடர்ந்து வளர முடியாதுள்ளது. இன்று குறிப்பாக விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவத்தில் புதுமையானவற்றை உள்வாங்கி, நிலைபேறான செயன்முறைகளை கையாண்டு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டிய கட்டத்தில் இலங்கை உள்ளது.
காலநிலைக்கு தூண்டற்பேறான நிலைத்து நிற்கக்கூடிய செயற்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே எந்தவித வர்த்தக பரிமாற்றமும் இல்லை என்பது இப்போது தெளிவாக இருக்க வேண்டும்.
மக்களுக்காக, இலாபத்திற்காக, உலகத்திற்காக, தொடர்ச்சியான நமது செழிப்பிற்காக, முக்கியமாக நாம் விவசாயத்தில் நிலையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இலங்கையானது அண்மைக்கால நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதால், அனைத்து குடிமக்களதும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி விவசாய புரட்சி, உணவு உற்பத்தி மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கான முன்னுரிமைப்படுத்தப்பட்ட நீண்டகாலம் நிலைத்திருக்ககூடிய புதிய நடைமுறைகளை ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக அமையுமாறு கையாளுதல் வேண்டும்.
அப்துர் ரஹீம் சித்திக் –
பிரதிநிதி மற்றும் நாட்டு
பணிப்பாளர், உலக உணவு திட்டம்
இலங்கை
நீர் அனைத்து துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதால் உலக உணவு தினத்திற்குரிய கருப்பொருளை நீரிலிருந்து ஆரம்பிப்பது சிறந்தது. நீர் வளங்கள் நிறைந்த நாடாக இலங்கை இருந்தாலும் நீர் முகாமைத்துவத்தில் சவால்களை எதிர்கொண்டுள்ளது.
FAO மற்றும் UN நிறுவனங்களினால் 2021ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 90.8 சதவீதம் குறிகாட்டியுடன் ‘நீரின் உயர் அழுத்தம்” என இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வகையீடு நன்னீர் வளங்கள் மற்றும் அவற்றின் நிலைத்திருக்கும் தன்மை மீதான மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை பிரதிபலிக்கிறது.
நாட்டினுடைய ‘நீர்’ பற்றிய வினாக்களுக்கு நீரின் தரம், அளவு மற்றும் உப்புத்தன்மை, வறட்சியின் போது தடையின்றி பாதுகாப்பான குடிநீரை எவ்வாறு வழங்குவது? உற்பத்தி திறனை எவ்வாறு விரிவுபடுத்துவது? நீர் ஆதாரங்களில் அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது மற்றும் நீரின் தரம் மோசமடைவதை எவ்வாறு தடுப்பது? என்பவற்றின் அடிப்படையில் விடை காணப்படுகிறது.
காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் எதிர்வு கூறமுடியாத தன்மையானது உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் நீர் உட்கட்டமைப்பில் பாதிப்புகளை அதிகரிக்கச் செய்யும். நிலையான விவசாய உணவு முறைகள் ஊடாக நீர் அழுத்தத்தைக் குறைப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்படுகின்றது. ஏற்கனவே வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் பயிர் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சிக்கும் குறிப்பாக கிராமப்புற ஏழைகள் மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது.
இன்னும் 10இல் நான்கு பேருக்கு குழாய் நீர் கிடைப்பதற்கான வசதிகளற்று உள்ளனர். நாட்டின் மக்கள் தொகையின் அண்ணளவாக 30 சதவீதத்திற்கு, 70 சதவீத நிலப்பரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உலர் மற்றும் இடை வலயங்கள் பெருமளவு விவசாயத்தில் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
அத்துடன், இடைவிடாத வறட்சியின் காரணமாக கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்நிலை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடரலாம்.
எனவே, நீர் நெகிழ்திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு இசைவாக்கமடைதல் முக்கியமானது. ஆனால் இந்த மாற்றத்திற்கு ஒரு கூட்டு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
விமலேந்திர ஷரன் –
ஐ.நாடுகள் சபை
இலங்கைமற்றும்
மாலைத்தீவுகளின்
உணவு மற்றும்
விவசாய
அமைப்பின் பிரதிநிதி
விவசாயிகள், நுகர்வோர், தனியார் துறை, அரசு, ஊடகங்கள் மற்றும் நாட்டின் இளம் சமூகத்தினரின் தீவிர ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபையும் குறிப்பாக அதன் உணவு சார்பான முகவர்கள் இந்த மாற்றத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளன.
பல ஆரம்ப முயற்சிகள் ஏற்கனவே சாதகமான முடிவுகளைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆனது நெற்செய்கையில் ஈடுபடும் 6,000 விவசாயிகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்கும் அதேவேளையில், குறைந்த இரசாயன உரங்களைப் பயன்படுத்தும் நவீன அணுகுமுறைகளை பின்பற்றி நிலையான நெல் சாகுபடியை ஊக்குவிக்கின்றது.
பெரும்பாலும், FAO பல முக்கிய பயிர்களில் நல்ல விவசாய நடைமுறைகளில் (GAP) வெற்றியடைந்துள்ளது. இந்த வெற்றி இரசாயன உள்ளீடுகள், நீர் மாசுபாடு ஆகியவற்றை குறைத்து ஆரோக்கியமான மற்றும் நிலைபேறான சூழலுக்கான இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகள் மற்றும் சூழல் தொகுதிக்கு பயனளிக்கிறது.
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD) தற்போது நாட்டின் உலர் வலயங்களில் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மூன்று ஆறுகளில் நீர் முகாமைத்துவத்திற்கான தொட்டி அடுக்கு அமைப்புகளுக்கு ஆதரவளித்து. அவற்றை புனரமைத்ததனால் விவசாயிகள் சிறுபோகம் மற்றும் பெரும்போகம் ஆகிய இரண்டிலும் விவசாயம் செய்ய முடியும்.
உலக உணவுத் திட்டம் (WFP) அவசரகாலத் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு ஆதரவை அரசாங்கத்திற்குத் தயார்படுத்துவதற்கும், தொடர்ச்சியான காலநிலை அதிர்ச்சிகளின் தாக்கத்தைத் தணிப்பதற்கும் உதவுகிறது. மேலும் இத்திட்டத்தில் தேசிய மற்றும் துணை தேசிய நிறுவனங்களுக்கு பருவமழை காலங்களில் ஏற்படிவிருக்கும் பேரழிவுகளைத் தடுக்க முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்த உள்வாங்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களுக்கான உணவு தடங்கலின்றி கிடைப்பதை உறுதிசெய்கின்றது.
ஒவ்வொருவரும் இன்றைய காலத்திலும் எதிர்காலத்திலும் நிலைபேறான நீர் மற்றும் சுகாதார சேவைகளை பெறுவதற்கான வசதியை பெற்றிருக்க வேண்டும். உண்மையில், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வானது தற்போது பின்பற்றும் நிலைபேறான வளங்களின் பாவனை முறைகளில் சார்ந்துள்ளது.
ஷெரினா தபசும் –
விவசாய மேம்பாட்டுக்கான
சர்வதேச நிதியம்
மற்றும் இலங்கை
மற்றும் மாலைத்தீவுக்கான
இயக்குனர்
இந்த மாற்றத்தை இளம் சமூகத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை கடன்பட்டுள்ளது. இளம் சமூகத்தினரே மாற்றத்தின் புதுமைகளை உந்துதல் மற்றும் மிகவும் நிலையான மற்றும் சமமான எதிர்காலத்திற்காக வாதிடும் சக்திவாய்ந்த முகவர்களாக இருக்க முடியும்.
இலங்கையில் நீர், உணவு மற்றும் நிலைத்திருக்கும் தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மறுக்க முடியாதது. இந்த உலக உணவு தினம் நமது பகிரப்பட்ட பொறுப்பின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது.
விவசாயம் மற்றும் நீர் முகாமைத்துவத்தில் நிலைபேறான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், இலங்கை எதிர்காலத்திற்கான உணவு பாதுகாப்பது மட்டுமல்லாமல், நமது உலகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இணக்கமான சகவாழ்வின் மாதிரியுடன் உலகை ஊக்குவிக்கவும் முடியும்.
இது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றைக் கோரும் ஒரு பயணமாகும் – இப் பயணம், ஒன்றாக மேற்கொள்ளப்படும் போது, அனைவருக்கும் பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கும். உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய இந்த மாற்றத்திற்கான பாதையில் நாம் அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.