Apple இன் iPhone 15 சீரிஸ் மொடல்கள் அறிமுகம்

0

Apple நிறுவனம iPhone 15 சீரிஸ் மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கியூபர்டினோ நகரிலுள்ள Apple அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் புதிய மொடல் செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஐபோன் 15, 15 பிளஸ், 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 புதிய மொடல் ஐபோன்களும், Apple வொட்ச் சீரிஸ் 9 மற்றும் வொட்ச் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு ஸ்மார்ட்வொட்ச்களும் வெளியிடப்பட்டன.

ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் புதிய 48 மெகாபிக்சல் முதன்மை கெமரா சென்சார் மற்றும் A16 SoC உடன் வருகிறது. இந்த ஆண்டு ஐபோன்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம், சார்ஜ் செய்வதற்காக USB-C போர்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights