அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of Enforced Disappearnce) August 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்நாளில் இலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை நினைத்து மாபெரும் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரித்தானியாவில் Trafalgar Square சதுக்கத்தில் இன்று புதன்கிழமை (30/08/2023) மாலை 5 மணி முதல் 8 மணி (5pm – 8pm) வரை அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இணைத்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.