இரண்டே வருடங்களில் கோட்டாபயவால் சிதைந்த ராஜ குடும்பம்..! சோகத்தில் முடிந்த நவீன துட்டகைமுனுவின் அரசியல்

0

 

சிறிலங்காவின் அரசியலில் நவீன துட்ட கைமுனுவாக வீழ்த்த முடியாத ஒருவராக கருத்தப்பட்ட அரச தலைவர் ஒருவர் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டுளளார்.

யுத்தத்தை வெற்றிகொண்டவர்களாக கொண்டாடப்பட்ட இன்னும் 20 ஆண்டுகள் அசைக்க முடியாத அதிகாரத்தில் இருப்பார்கள் என கணிக்கப்பட்ட ராஜ்பகேசே குடும்ப உறுப்பினர்கள் றாஜினாமாக்களை செய்ததன் பின்னணி என்ன?

இராணுவத்தில் ஒருவனாக, அமெரிக்க பிரஜையாக இருந்து அதிபராகி இன்று நாடு விட்டு நாடு ஓடுவது எப்படி? இந்தக் கட்டுரை இவற்றைத்தான் ஆராயவுள்ளது.

அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் கோட்டாவின் ஆரம்ப காலம் இராணுவத்துடனேயேயே கழிந்து சென்றிருக்கிறது. சிறந்த நிர்வாகி, இராணுவத்தில் இருந்தததால் கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளிப்பவர், அமெரிக்காவில் வாழ்ந்ததால் மேற்குலக சிந்தனைகளையும் உள்வாங்கக்கூடியவர் என்ற பில்ட் அப்புக்களுடன் பின்னாளில் நேரடி அரசியலில் உள்வாங்கப்படுகின்றார்.

யுத்த வெற்றியையும் இனவாதத்தையும் வைத்துக்கொண்டு அரியணை ஏறி இருந்த மகிந்தவை மைத்திரி என்னும் அம்புகொண்டு சிங்கள மக்களும் சர்வதேசமும் வீழ்த்தும் போதே மகிந்த சுதாகரித்திருக்க வேண்டும். ஆனால் ஆசை யாரை விட்டது. சிறிலங்கா வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் முன்னாள் அதிபர் ஒருவர் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கிறார். அதில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றது மட்டுமன்றி பிரதமரும் ஆகிறார். ஆனால் வாக்கு அரசியலில் விசுவாசம் எல்லாம் எம்மாத்திரம் என்பதை கோட்டாவை நேரடி அரசியலுக்கு இறக்கும் போதே அவரது அண்ணன் மகிந்த சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதிபர் தேர்தலில் தோல்வியை பரிசளித்திருந்தாலும் மீண்டும் பிரதமர் வரை வந்து இருக்கிறேனே என்ற அதீத நம்பிக்கையோ அல்லது இறுமாப்போ கோட்டாவை அதிபர் வேட்ப்பாளராக களமிறக்க உந்தி இருக்கலாம்.

2019 உலக கிறிஸ்தவர்கள் தங்கள் ஈஸ்ட்டர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு இருந்த வேளை இலங்கையின் முக்கிய தேவாலயங்களில் குண்டுகள் வெடிப்பதில் கோட்டாவின் பயணம் ஆரம்பமாகின்றது என்பது இன்று வரை ஊடகர்களினாலும் அரசியல் ஆய்வாளர்களினாலும் அழுத்தமாக வைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கும் அரியணையில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பதற்கும் ராஜபக்சே குடும்பம் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து அதிபர் தேர்தலை எதிர்கொண்டது. இலங்கை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்தரப்பில் இருந்த குழப்பம். பிரேமதாசாவின் மகன் என்ற விம்பம் தாண்டி பலமில்லா சஜித் என்ற சூழல் எல்லாம் சேர 69 லட்ஷம் வாக்குகளை பெற்று ஸ்ரீ லங்காவின் அதிபராகிறார் கோட்டா.

இந்த வெற்றி, யுத்தத்தை வெற்றி கொண்டதற்கு மீண்டும் தனி சிங்கள மக்கள் தந்த வெற்றி என்றும் இது சிங்கள பௌத்த நாடு நான் சிங்கள மக்களுக்கான அதிபரென கோட்டா கொக்கரித்தது மட்டுமில்லாமல் வழமைக்கு மாறாக அனுராதபுரம் சென்று நவீன துட்டகைமுனுவாக தன்னைத் தானே பிரகடப்படுத்திக்கொண்டு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பின்னர் முக்கியமான திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் என சிவில் சமூகம் சார்ந்த பதவிகளில் எல்லாம் முன்னாள் இராணுவ அதிகாரிகளை நியமித்த போது ஊழலுக்குள் சிக்குண்டு இருக்கும் நாட்டுக்கு இராணுவம் போன்ற கட்டமைப்புக்குள் இருந்து வந்த அதிகாரிகளை நியமித்து ஊழலற்ற ஒரு சமூகத்தை இவர் உருவாக்குவார் என கூறிய அரசியல் ஆய்வாளர்களும் உண்டு. மறுபுறத்தே கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை நீர் விழுகுவதைப்போல சிவில் அமைப்புக்கள் எல்லாவற்றையும் இராணுவ கட்டமைப்பு போல தனது கட்டுக்குள்ளே கொண்டுவந்தது ஒருபுறம் நடக்க இதே தூதரக அதிகாரிகள், சர்வதேச விவகார அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களளாலேயே இன்று வீழ்ந்துஇருக்கிறார் என்பதும் உண்மை. சர்வதேச தொடர்பு எல்லைக்குள் சென்றவர்கள் அப்படியே சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு உடந்தையாகிப்போனார்கள்.

2019 இறுதிப்பகுதியில் கோட்டா ஆட்சிக்கு வரவும் கொரோனா உலகம் முழுவதும் தனது வீரியத்தை காட்டவும் சரியாக இருந்தது. உலகமே கொரோனாவை கட்டுப்படுத்த தவித்துக்கொண்டிடுந்த தருணம் இலங்கையிலும் மெது மெதுவாக கொரோனாவின் தாண்டவம் தொடங்குகின்றது. அதன் ஆரம்ப கட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்திய ஏன் வெற்றிகொண்ட அதிபராக கோட்டா கருத்தப்படடார். ஆனால் அது பலகாலம் நிலைக்கவில்லை. கொரோனா பரவ பரவ கோட்டாவின் வீழ்ச்சியும் ஆரம்பமானது. நாடே ஸ்தம்பித்து போயிருந்த நிலையில் பாரிய பிரச்சாரங்கள் இன்றி நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபகேச தலைமையில் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றுகின்றார்கள்.

பாரம்பரிய கட்சியான இலங்கை சுதந்திர கடசியிலிருந்து விலகி ராஜ்பகேசே குடும்ப கட்சியாக பொதுஜன பெரமுனாவை நிறுவி அதன் மூலம் கிடைத்த வெற்றி இவர்களை இன்னும் ராஜ போதைக்குள் தள்ளியது என்று தான் சொல்லவேண்டும். ஆரம்பித்த வேளையில் சிங்கள மக்களுக்கு அதிரடி காட்டி ஹீரோவாக தென்பட்ட கோட்டா கொஞ்சம் கொஞ்சமாக அந்த விம்பத்தை இழக்கத் தொடங்கினார். கொரோனாவை கட்டுப்படுத்துவது முதல், நாட்டிடை விற்பது என்று அடுக்கடுக்காக பின்னடைவுகளை கோட்டா தலைமையிலான அரசு சந்திக்க ஆரம்பித்தது. இந்த அரசும் இதற்கு முன்னைய அரசுகளும் எடுத்த முடிவுகளும் செயற்பாடுகளும் நாட்டை பாரிய பொருளாதார சிக்கலுக்குள் தள்ளப்போகின்றது என பல பொருளாதார வல்லுனர்களும் தொடர்ந்து வலியுறுத்திய வேளையிலும் அவை எவற்றையும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாத ஏன் அதைப்பற்றி சிந்திக்காத 30 வருட யுத்தத்தை வெற்றி கொண்ட எமக்கு இது எல்லாம் பெரிய விடயமல்ல என்ற மமதையுடன் கோட்டாவின் அரசு நடந்துகொண்டது. குடும்ப உறுப்பினர்களை முக்கிய அமைச்சு பொறுப்புகளில் நியமித்ததோடு நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளும் வேளை கூட பொருளாதார நிபுணர்களை உள்வாங்காது 7 மூளைக்கு சொந்தக்காரன் பொருளாதார வித்தகன் என்ற பெரு விம்பத்தோடு சகோதரர் பசிலையும் உள்ளே கொண்டுவந்தார்கள். அதுவரை 1 ஆம் கியரில் சென்றுகொண்டிருந்த பொருளாதார நெருக்கடி அதன் பின் அசுர வேகம் எடுத்தது. கதாநாயக விமபத்துடன் கொண்டுவரப்பட்ட பசில் ஜோக்கராக வெளியேற்றப்படுகின்றார்.

கோட்டா- மகிந்த அரசு செய்த தவறால் மட்டுமே நாடு இந்த நிலைக்கு வரவில்லை. அதற்க்கு முன்னைய நல்லாட்சி, இனப்படுகொலை செய்த ஆட்சி, யுத்தத்தை நடத்திய ஆட்சி என முன்னைய ஆட்சியாளர்களும் இதில் பங்குதாரர் தானே ஏன் இவர்கள் மட்டுமே இலக்கு வைக்கப்படடார்கள் என்ற கேள்வி மறுபுறம் எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கான விடையை தேடினால் பதில் ஆம் என்பதே. ஆனால் அந்தந்த நேரங்களில் அந்த ஆட்ச்சியாளர்களுக்கு இருந்த சூழல் என்பது அப்போது அவர்களை காப்பாற்றியது. இப்போதிருக்கும் இலங்கை அரசியலில் சரியான காய்நகர்த்தல்களை செய்க்கக்கூடிய சிங்கள அரசியல் தலைவர்களாக பார்க்கப்படுவர்களில் முதன்மையானவர்கள் Mr. Fox என அழைக்கப்படும் ரணிலும் அரசனானாக தன்னை நிலை நிறுத்த முயன்ற மகிந்தவுமே. குடும்ப ஆட்சி எப்படி உறுதுணையாக இருக்கும் என்று நினைத்தார்களோ அதுவே அவர்களுக்கு பலவீனமாகவும் இருக்கப்போகின்றது என்பதை தப்பாக கணக்கிட்டு விட் டார்கள். அதிகார போட்டி, குடும்ப சிக்கல்களும் ஆங்காங்கே எட்டிப்பார்க்க அந்த சூழலை இலாவகமாக கையாள்வதில் காட்ட வேண்டிய அக்கறை எல்லாவற்றையும் கோட்டாவும் மகிந்தவும் வேறு இடத்தில் காட்டியதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள்.

நிலைமை கட்டு மீறுகின்றது, தொடர்ந்தும் நாட்டை அடகுவைக்காதீர்கள் என்ற சர்வதேம்,பொருளாதார வல்லுநர்கள், தொழிற்சங்கங்களின் தொடர்சசியான எச்சரிக்கைகளை ஆடசியாளர்கள்பொருட்படுத்தாதும், இதுவரை காலமும் சந்திக்காத எரிபொருள் சிக்கலும் நீண்ட காலமாக அனுபவித்துவந்த மின்சார வசதி சீர்கேடும் சேர பொருளாதார ரீதியாக மேல்நிலை, இடைநிலை, நலிவு நிலை என்றவேறுபாடுகள் இன்றி கைக்குழந்தைக்கோடு பெண்களும் சேர மிரிஹானையில் இரவோடு இரவாக முதல்சம்பவம் பதிவாகிறது.

வெள்ளை வான் கடத்தல்காரர்கள், எதிர்த்தால் நசுக்கி விடுவார்கள் என்ற பயம் இருக்கின்றது என்றவிம்பங்கள் எல்லாம் கொண்டாடப்படட சிங்கள மக்களாலேயே உடைத்தெறியப்படட நாள் அது.அன்றைய அந்த மக்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் அந்த தீ காலிமுகத்திடலில்பற்றியிருக்காமலும் போயிருக்கலாம். வீட்டுக்குள் புழுக்கம் சூழ மனதிலும் புழுக்கத்தோடு வீதிக்கு வந்தமக்களை இராணுவ இயந்திரம் கொண்டு அடைக்கியதும் தாக்கியதும் அந்த மக்களை இன்னும்வீறுகொள்ள வைத்தது. குறித்த நாள் இரவு கோட்டா அங்கிருந்தாரா இல்லையா என்ற கேள்விக்குஇன்னும் விடை கிடைக்காவிடடாலும் நாமலின் அணியொன்றும் கோட்டாவுக்கு எதிராக அன்றைய தினம்களமிறங்கியிருந்தது என்ற ஐயம் இன்றும் உள்ளது.

மிரிஹானை சம்பவத்தின் சூடு அடங்க முன்னமே முன்னொரு காலம் மக்கள் நெருங்க முடியாதுதடுத்துவைக்கப்பட்ட காலி முகத்திடலில் ஒன்று கூடிய மக்கள் கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் “Go Home Gotta” என்ற கோஷத்துடன் தங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கின்கின்றனர். ஏப்ரல் மாதநடுப்பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டம் நேர்த்தியான முறையில் கட்டமைக்கப்படுகின்றது. அரசதனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளையோருடன் பெண்களும் இணைந்துகொள்ள போராட்டம்வலுப்பெறுகின்றது.

இலங்கை இதுவரை பார்க்காத ஒரு போராட்ட வடிவம். கடந்த காலங்களில் தமிழகத்தில் இடம்பெற்றஜல்லிக்கட்டு போராட்டம் போல என பாராட்டு ஒரு புறம், இல்லை இதற்க்கு பின்னால் மேற்குலகசக்திகள் இருக்கின்றன. உற்று பாருங்கள் Tents போடப்பட்டு அங்கேயே தங்கி இருந்துபோராட்டத்துடன் இதர பொழுதுபோக்கு விடயங்கள் என பல கட்டமைக்கப்படுகின்றன. நிச்சயமாகஇது மேற்குலகின் அனுசரணையுடன் தான் இடம்பெறுகின்றது என்ற கருத்துக்கள் மறுபுறம். இப்படிஇருக்க இந்த போராட்டத்தில் இருப்பவர்கள் மக்கள் மட்டுமல்ல. மக்களுடன் மக்களாக குமார்குணரட்ணம் வழிநடத்தும் குழு ஒன்று, ஜே.வி.பியின் குழு இன்னொன்று, ஏன் ரணிலை ஆதரிக்கும் குழுஒன்று என்று பலர் பின்னின்று நகர்த்துகின்றார்கள் என்ற நோக்கிலும் இந்த போராட்டம்அணுகப்படுகின்றது.

எது எப்படி இருப்பினும் ஒன்று திரண்ட மக்கள் அதை ஒரு மக்கள் எழுச்சியாகவே கையாண்டு கொண்டுபோராட்டத்தை நகர்த்த ஆரம்பித்தனர் ( சிலவேளை இதுவும் திடடமிடப்பட்ட நகர்வாக இருக்கலாம்).அவர்களை அங்கிருந்து அகற்ற ஆரம்ப நாட்களில் கடும் பிரயத்தனங்கள் எடுக்கப்படாவிடடாலும் நேரடிமற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவந்தன. ஆனால் கோட்டாவை வீட்டுக்குஅனுப்புவதுதான் தங்கள் இலக்கு என்பதில் தெளிவாக நின்ற போராட்டக்காரருடன் ஒரு தொகுதிதமிழர்களும் இணைந்துகொண்டனர். ஆதரவு எதிர்ப்பு என போராடடத்துக்கான குரல்கள் மாறி மாறி எழ தொழிற்சங்கங்கள், கலைஞர்கள் என போராடடத்துக்கான ஆதரவும் அதிகரித்தே வந்தது.போராட்டத்துக்கு நேரடியாக அரசியல் வாதிகள் சென்று கையகப்படுத்த மக்களும் விடவில்லைஅரசியல்வாதிகளும் முயலவில்லை. அதையும் தாண்டி அங்கு சென்ற சஜித் பிரேமதாசாஉள்ளிடடோருக்கு நடந்ததை வைத்துக்கொண்டே ஏனையவர்கள் தவிர்த்தார்களோ என்ற கேள்வியும்உண்டு. ஆனால் பெரும் பதற்றம் நிலவிய சூழலிலும் அங்கு அனுரகுமார திஸாநாயக்க சென்றது JVPன்பங்களிப்பு தொடர்பில் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவது முதன்மை நோக்கமாக கொண்டு சேர்ந்தவர்களின் எண்ணங்கள்கொஞ்சம் பரவ ஆரம்பித்தது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும்வீட்டுக்கு செல்லவேண்டும் என்பதுடன் மகிந்தவை அனுப்பி வைக்க மைனா கோ கம என்ற போராடடமும்சேர்ந்துகொண்டது. அதன் முதற்கட்டமாக கோட்டாக்கம என்ற மாதிரி கிராமம் ஒன்று அங்கேயேஉருவாக்கப்பட்ட்து. அதில் நூலகம், திரையரங்கு, கடைகள் என பல விடயங்கள்உள்ளடக்கப்பட்டிருந்தன. அமைதியான முறையில் நகர்ந்து சென்ற போராடடத்தின் கோரிக்கைகள்நாட்செல்ல செல்ல வலுப்பெற்றது. கொல்லப்படட ஊடகவியலாளர்களின் பெரும் பதாகைகள்காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான நீதி கோரப்பட்டிருந்தது இதில் முக்கியமான ஒரு விடயம்.

 

மே மாதம் பிறந்தது முதல் இந்தப் போராட்டத்தை அரசு எப்படி கையாளப்போகின்றது என்ற கேள்விபரவலாக எழுப்பப்பட்ட்து. தமிழினம் படுகொலை செய்யப்பட இந்த மாதத்தில் கடந்த காலங்களில்அவர்களை நினைவுகூர பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறையும் அரசு எப்படிநகரப்போகின்றது என்ற கேள்வி இந்த போராட்டம் தொடர்பில் மேலும் பல கேள்விகளை எழுப்பியது.சமகாலத்தில் என்னை பதவி விலக சொல்லாமாடடார் என பிரதமராக இருந்த மகிந்தவும் நான் பதவிவிலக மாடடேன் என ஜனாதிபதி கோட்டாவும் மாறி மாறி ஊடகங்களுக்கு செய்திகளைதந்துகொண்டிருந்தனர். இது நாடகமா அல்லது இருவருக்கும் இடையில் பனிப்போர் உக்கிரம்பெற்றுவிட்டதா என்ற சந்தேகங்களை எல்லாம் எழுப்பிய தருணம். அது மே மாதம் 9 ஆம் திகதி, காலம்காலமாக தமிழினத்தை கொன்று ரத்தம் பார்த்தவர்கள் தன இனத்தின் ரத்தத்தை மீண்டும் ஒரு தடவைசுவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட நாள் . கொழும்புக்கு வெளியே இருந்து பணத்துக்காவும்,மதுவுக்காகவும், பிரியாணிக்காகவும் என பேருந்துகள், ரயில்களில் இறக்கப்படட குண்டர்கள் அதுவரைஅமைதியாக சென்றுகொண்டிருந்த காலி முகத்திடலில் புகுந்து அடித்து உடைத்து நாசம் செய்ய ஆரம்பித்தனர்.

 

இராணுவ அதிகாரிக்காயாக இருந்தே வேளையிலேயே தன இனைத்தை கொன்ற கோட்டாஜனாதிபதியாக இருக்க அவர் அண்ணனின் ஆட்கள் தான் இவர்கள் என்ற சந்தேகத்துடன் புகுந்து நாசம்செய்தவர்களை போராட்டக்காரர்களும் பதிலுக்கு தாக்கினர். மகிந்தவின் அரசியல் ஆசைக்காகவந்திறங்கிய குண்டர்களை அடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கியது ஒரு கும்பல்.பேருந்துகளில் வந்தவர்களை நீர்நிலைகளுக்குள் வீழ்த்தி அங்கயே அவர்களை மணிக்கணக்கில்வைத்திருந்தது இன்னொரு கும்பல். மகிந்தவும் அவர் தம் சகாக்களும் தான் இந்த நாடகத்தைஅரங்கேற்றுகின்றனர் என அறிந்துகொண்ட போராடடக்குழு மகிந்தவின் வீடு மட்டுமன்றி அதற்குபக்கபலமாக இருந்தவரிகளையும் இனங்கண்டு அவர்களின் வீடுகள் சொத்துக்களையும் அழித்தனர்.நிலைமை கட்டு மீறி செல்கின்றது என்பதை உணர்ந்த நாசகார கும்பல் உடனடியாக அவ்விடத்தை விட்டுநகர சுதாகரித்துக்கொண்ட போராடடக்காரர்களும் மீண்டும் காலி முகத்திடல் சென்று தங்கள்போராடடத்தை புனரமைத்து கொண்டனர் .

இராணுவம், போலீஸ், அரச இயந்திரம் என அத்தனையும் கை மீறி நின்ற நிலையில் மக்கள்போராட்டத்தின் முதல் கோரிக்கை ஒன்று வெற்றி பெற்றது. பதவி விலகலை மறுத்து வந்த மகிந்தவும்தனது பிரதமர் பதவியை விட்டு ஓட நாடு அரசியல் ரீதியாக இக்கடடான ஒரு சூழலை சந்திக்கின்றது. பதவிவிலக வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வந்தாலும் ஆடசியை பொறுப்பெடுக்க எவரும்முன்வரவில்லை. எப்படியாவது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என ஆசைப்படட சஜித்சூழலை கையாளத்தெரியாது சின்னப்பிள்ளை விளையாட்டு விளையாட தேசிய பட்டியல் மூலம்உள்நுழைந்த ரணில் அதை கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.

பிரதமர் பதவியை ரணில் பொறுப்பெடுத்ததும் போராட்டக்காரர்களின் கோவம் ரணில் மீதும் திரும்பியது.ஆனால் அவற்றை கசித்தமாக கையாண்ட ரணில் காலிமுகத்திடல் மீது கை வைக்கக்கூடாது என்று ஒருபுறமும் கோட்டா தரப்பை கையாள்வதில் மறுபுறமும் என இரட்டை முகத்தை காட்டிக்கொண்டு தன காய்நகர்த்தலை ஆரம்பித்தார்.

தமிழர்களும் ஒன்று பட வேண்டும். தமிழில் தேசிய கீதம் பாடுவது மட்டுமே நல்லிணக்கம் ஆகாது. நாங்கள்ஏன் போராடவேண்டும் என்ற கோஷங்கள் வலுப்பெற்றிருந்த தருணம். அன்று மே 18. நந்திக்கடலில்நசுக்கப்படட இனத்தை உலகமெங்கும் தமிழர்கள் நினைவு கூறும் நாள்.நல்லிணக்கம் பேசியவர்கள்என்ன செய்துவிடப்போகின்றார்கள் என்ற கேள்வி காலி முகத்திடலை சுற்றி வர, மத தலைவர்கள் உட்பட சிங்கள போராட்டக்காரர்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்படடவர்களை காலிமுகத்திடலில் நினைவுகூர்ந்த்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும்வழங்கப்பட்டது.

கோட்டா – ரணில் அரசு அமைந்துவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பு குறைந்து போராட்டம் தனவீரியத்தை இழக்கின்றது என்ற எண்ணங்கள் பரவ ஆரம்பிக்கின்றது. ஆனால் ஜூலை 9 ஆம் திகதிமீண்டும் நாள் குறிக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் கொழும்பில் அணிதிரள்வோம் என்ற கோஷத்துடன் ரயில்களிலும் பலர் வந்து சேர போராட்டம் திடீரென மீண்டும் பேரெழிச்சிகொள்கின்றது. இந்த காலத்தில் எல்லாம் இராணுவத்தினரும் போலீசாரும் அமைதி காத்திருந்ததுபெரும் ஆச்சரியமே. எழுச்சியுடன் ஜனாதிபதியின் இல்லம் சென்ற போராடடக்காரர்கள் அதைமுழுமையாக கையகப்படுத்தியதுடன் அதை ஒரு சுற்றுலா தளம் போல பாவனை செய்துகொண்டதையும்காணமுடிந்தது. வீட்டிலிருந்து விரட்டப்படட கோட்டா கட்டுநாயக்கவை நோக்கி பயணிக்கின்றார் என்றகாட்சிகளும், கடற்படைத்தளத்தில் ஏற்றப்படும் பொதிகளும் அடங்கிய காணொளிகள் அடுக்கடுக்காகவெளியாகின. இந்த நிலையில் ராஜ்பாகேஷேக்களை அதிகாரத்துக்கு கொண்டுவந்த இந்தியா அவர்களை முழுமையாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து கோட்டா தப்பித்து கொள்ள முழு ஏற்பாட்டையும் செய்துள்ளது.

இலங்கையிலிருந்து தப்பி மாலைதீவு சென்றடைந்த கோட்டாவுக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பியது.நாட்டிடை விட்டு ஓடிவிட்டார் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நேரம்13ஆம் திகதி இறுதி முடிவு என்ற அறிவிப்பும் வருகின்றது. சம நேரத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில்விக்ரமசிங்கே பொறுப்பெடுக்கப்போகின்றார் என்ற செய்தி போராடடக்காரர்களை இன்னும் கோபமடைய செய்கிறது. அடையாளம் தெரியாதவர்களினால் ராயல் கல்லூரிக்கு உயில் எழுதிவைக்கப்பட்ட அவரது வீடும் எரிந்து தீர்க்கிரையாகிறது. அலறி மாளிகையும் கையகப்படுத்தப்பட்டது.இரண்டு அறைகளில் நிரம்பியிருந்த பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து விட்டன என கண்ணீர்வடிக்கின்றார். அரிய பொக்கிஷமான யாழ் நூலின் இழப்பை கண்ட தமிழினத்திடமும் ரணிலின்நரித்தனைத்தையும் அறிந்த சிங்கள மக்களிடம் அவரின் இந்த செண்டிமெண்ட் காடசிகள்எடுபடவில்லை.

நாடு நாடாக கோட்டா அலைய 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட பனங்காட்டு நரி ஒன்று தனஅரசியல் கனவை நனவாக்கும் அத்தனை ஆயுதங்களை கையிலெடுக்கின்றது. ஸ்ரீ லங்காவின் பதில்ஜனாதிபதியாக அத்தனை அதிகாரங்களையும் ரணில் பொறுப்பெடுக்கின்றார் என்ற அறிவுப்புவெளியாகின்றது. சர்வதேசமும் மேற்குலகமும் இலங்கையை மீட்க்கத்தயாராகின்றது. இதனிடையேமாலைதீவிலிருந்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிங்கப்பூரில் தங்கச்சமடைந்த கோட்டா அங்கிருந்துஅவரது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைக்கிறார். மறுபுறம் ஸ்ரீ லங்காவின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்று தனது வாழ்நாள் சாதனையை நிறைவேற்றுகிறார்ரணில்.

இனி, ரணில் ஜனாதிபதியாக தொடர முடியாது பதவி விலக வேண்டும் என்று மாபெரும் போராடடத்துக்குதயாராகிறார்கள்.

எரிபொருள் கொள்கலன்கள் வந்துகொண்டிருக்கின்றன என்ற செய்தியோடு சிறிய விலைக்குறைப்பு.

புலம்பெயர் தேசங்களில் உள்ள சிங்கப்பூர் தூதுவராலயங்களுக்கு முன் தமிழர்களின் போராட்டம்.

20ஆம் திகதி ரணிலோடு மோதப்போவது யார் இறங்கப்போவது யார் என்ற பேரம் பேச்சுகளுக்கு நடுவில்சத்தமில்லாமல் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கான வேலைகளை கோட்டா ஆரம்பித்துவிடடார்.

இன்னொரு புறம் சட்டத்தரணிகள் சங்கம் கையகப்படுத்திய அரச சொத்துக்களை மீள கையளிக்கவேண்டும் என போராட்டக்காரர்களை வலியுறுத்துகிறது. போராட்டக்காரர்களும் புதிய அரசியல் கட்சிஒன்றை ஆரம்பிக்கின்றார்கள்.

இவ்வளவு நடந்தும் மகிந்த அமைதியாக இருப்பதை உன்னிப்பாக நோக்க வேண்டும்.

1. இந்த சூழலை அமைதியாக இருங்கள் இல்லையேல் உன்னையும் கோட்டா போல ஓடவைத்துவிடுவார்கள் என இந்தியா அடக்கி வைத்திருக்கலாம்.

2. அரசியல் எதிரியாக வெளியில் காட்டிக்கொண்டாலும் ராஜபக்சக்களை காப்பாற்றப்போகும்காவலனாக ரணிலுடன் இணக்கப்பாட்டிற்கு சென்றிருக்கலாம்.

ராஜபக்ச சகோதரர்களை பொறுத்தவரை இனி நாமலின் கரம் ஓங்கவேண்டும் என்பதையே விரும்புவார்கள். அமைச்சர்கள் பதவி விலகும் போதும் முதலில் விலகி, தான் களங்கமற்றவன் என்பதைகாட்டியது நாமல் தான். எனவே ரணிலும் தனது அரசியலில் இறுதிக்காலத்தில் குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் ஜனாதிபதியாக பவனி வரவும் சஜித்தை அரசியலிலிருந்து முழுமையாக ஓரங்கட்டி இடைப்படட காலத்தில் மைத்திரி அல்லது மொட்டுக்கடசி ஆதரவுடன் ஒருவரை பிரதமாராக்கி தனது ஹனிமூனை முடித்த பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கும் தருணம் நாமலை பிரதானமாக்கி ராஜபக்சேக்களின் வாரிசு ஆடடம் ஆரம்பிக்கலாம்.

மறுபுறம் ரணில் தனது புத்தியை காட்டி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதுடன்மைத்திரியை பாவித்து மொட்டிலிருந்து பலரை உருவி அந்தக்கட்சியை பலவீனமாக்கி ராஜபக்சேக்களின் கதையையும் முடிக்கலாம். இதில் எது நடந்தாலும் ஆச்சரியமில்லை….

இன்று ராஜபக்சேக்கள் விரட்டிடப்பட்டிருப்பதும் அடங்கி இருப்பதும் இலங்கை அரசியலைப்பொறுத்தவரை ஒரு இடைவேளையே..

-ஷதீஷ்-

Leave A Reply

Your email address will not be published.