மன அழுத்தத்தை இனி எப்போதும் கண்காணிக்க வந்த புதிய வோட்ச்..!

0

ஹானர் நிறுவனத்தின் GS 3 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள நிலையில் அதன் அசத்தலான அம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

இதன் டிஸ்பிளேவை பொருத்தவரை 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் 3D வளைந்த கிளாஸ் உடன் இருக்கும். அதேபோல் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோடுகள், 10-க்கும் அதிகமான ப்ரோபஷனல் ஸ்போர்ட்ஸ் மோடுகள், 85 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன.

அத்துடன் 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் இதில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் புதிதாக 8 சேனல் PPG சென்சார் மாட்யுல் உள்ளது. இதுதவிர AI ஹார்ட் ரேட் சென்சார் இடம்பெற்றுள்ளது.

மன அழுத்தத்தை கண்காணிக்கும்! எண்ணற்ற அம்சங்களுடன் புதிய Smartwatch... பட்ஜெட் விலை

 

அதேபோல் பயனர்களின் ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் சென்சார்களும் இதில் இடம்பெற்று உள்ளன. மேலும் இதில் ப்ளூடூத் காலிங் அம்சமும் வழங்கப்படுகிறது.

முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன் கொண்ட பேட்டரியுடன் இந்த ஹானர் வாட்ச் GS 3 உள்ளது. மேலும் 32MB ரேம், 4GB இண்டர்னல் மெமரி, கைரோஸ்கோப் சென்சார், அக்செல்லோமீட்டர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், ஏர் பிரெஷர் சென்சார், மைக்ரோபோன், ஸ்பீக்கர், ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐ.ஓ.எஸ். 9 உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.

இதன் விலை $167 என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.