சோலார் கார் தயார்! விலை என்ன தெரியுமா…?

0

சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் கார் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்சார சார்ஜிங் இன்றி இந்த காரை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த அசத்தலான காரை உருவாக்கி உள்ளது.

லைட் இயர் 0 மொடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் கார் இயக்கத்திற்கு தேவையான சூரிய சக்தி ஆற்றலை உருவாக்குகிறது.

அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார், ஸ்டார்ட் செய்த பத்து விநாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விலை $250,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.