ஆட்ட நாயகன் விருதையே விட்டுக்கொடுத்த 5 வீரர்கள்..

0

கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. இதற்கு உதாரணமாக பல நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளது. இப்படி நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் தனக்கு கொடுக்கப்பட்ட மேன் ஆப் தி மேட்ச் எனப்படும் ஆட்டநாயகன் விருதை சக வீரர்களுக்கு பகிர்ந்து கொடுத்தோ அல்லது விட்டுக் கொடுத்தோ தனது பெருந்தன்மையை நிரூபித்துள்ளனர். அப்படி நிரூபித்த 5 வீரர்களை இதில் பார்க்கலாம்.

கௌதம் கம்பீர்: 2009ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் இலங்கைக்கு எதிராக 150 ரன்கள் குவிக்க இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. அதே போட்டியில் தனது முதல் சதத்தை விராட்கோலி விளாசினார். அவர் 114 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தில் மேன் ஆப் தி மேட்ச் வென்ற கௌதம் கம்பீர் அதை முதல் சதமடித்த விராட் கோலிக்கு விட்டுக்கொடுத்து அசத்தினார்.

பாபர் அசாம்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 305 ரன்களை சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. இந்த போட்டியில் பாபர் அசாம் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, இக்கட்டான சூழ்நிலையில் 23 பந்துகளுக்கு 41 ரன்களை குவித்த குஷ்தில் ஷாவிற்கு  விட்டுக் கொடுத்தார்.

ஸ்மிர்த்தி மந்தனா: இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 123 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை அதே ஆட்டத்தில் 109 ரன்களை குறைந்த பந்தில் விளாசிய ஹர்மன்பிரித் கவுரோடு பகிர்ந்து கொண்டார் மந்தனா.

குல்தீப் யாதவ்: நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை அணியின் முக்கியமான 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் பட்டேலோடு பகிர்ந்துகொண்டார்.

ஆஷிஸ் நெஹ்ரா: ஐபிஎல் தொடரில் ஒரு முறை சென்னை அணிக்காக விளையாடிய நெஹ்ரா முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதற்கு அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் அதே ஆட்டத்தில் 46 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்த மைக் ஹஸ்ஸியோடு விருதை பகிர்ந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights