நிலைப்பாட்டை மாற்றிய விஜய்!சங்கீதா உடன் சேர்ந்து வாழு முடிவு?

0

மனைவி சங்கீதா உடன் சேர்ந்து வாழு முடிவு செய்து,  விவகாரத்தை திரும்ப பெற விஜய் முடிவெடுத்துள்ளதாக  தெரிகிறது.

 

நடிகர் மற்றும் தமிழக முதல்வரான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிப்ரவரியில் சங்கீதா தாக்கல் செய்த இந்த மனு, நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  வழக்கின் முக்கிய கட்டமாக, முதல்வரான விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என்றும், தனது வழக்கறிஞர் மூலமாக காணொலி வாயிலாக ஆஜராவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சங்கீதா நேரில் ஆஜராக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 15-ம் தேதி விவகாரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், விஜய்-சங்கீதா இடையே சமரச உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் தயார் சோபா சங்கீதாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்று இருப்பதால், இந்த நேரத்தில் விவகாரத்து வழக்கு அதன் மீது விசாரணை நடந்தால், அது விஜய்க்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து கடுமையாக விஜயை விமர்சனம் செய்வார் என சங்கீதாவிடம் சோபா எடுத்துரைத்து இருக்கிறார். இதே கருத்தை விஜயிடமும் சோபா கூறி அவரை சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.

ஜூன் 15 ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கு இன்னும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால் அன்றைய தினம் அதுபற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் நாளை மறுநாள் வரும் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்-சங்கீதா வழக்கில் புதிய திருப்பமாக இணைந்து வாழு முடிவு செய்து இருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் வேகமாக பரவி உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights