கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது ஆரம்பக்கட்ட பதவிக்காலத்தில் அதிகளவிலான சட்டமூலங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார் என ‘வெரிடாஸ் ரிசேர்ச்’ (Veritas Research) நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய புள்ளிகள்:
-
மக்கள் எதிர்பார்ப்பு: நாட்டில் ஊழலை ஒழித்து, நல்லாட்சியை ஏற்படுத்தவே மக்கள் மைத்திரிபால சிறிசேன மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகிய இருவருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சியதிகாரத்தை வழங்கினர்.
-
அனுரவின் வேகம்: ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது 136 நாள் பதவிக்காலத்தில் 50 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு, 43 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அவற்றில் 32 சட்டமூலங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
மைத்திரியின் சாதனை: இதற்கு நேர்மாறாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 126 நாள் பதவிக்காலத்தில் 54 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு, 48 ஐ தாக்கல் செய்த போதிலும், 20 சட்டமூலங்களை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.
ஆரம்பத்தில் யார் கெத்து? எனினும், இரு ஜனாதிபதிகளினதும் முதல் 6 மாத காலப்பகுதியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மைத்திரிபால சிறிசேனவே அதிக சட்டமூலங்களை நிறைவேற்றியுள்ளார். அவர் தனது முதல் 41 நாட்களில் 17 சட்டமூலங்களை வர்த்தமானியில் வெளியிட்டு, 16 ஐ தாக்கல் செய்து, 6 சட்டமூலங்களை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்கால செயல்பாடுகள்: ஒரு பார்வை
ஜனாதிபதி (பதவிக்காலம்) வர்த்தமானி வெளியீடு நாடாளுமன்றில் தாக்கல் நிறைவேற்றப்பட்டவை அனுர குமார (136 நாட்கள்) 50 43 32 மைத்திரிபால (126 நாட்கள்) 54 48 20