காசாவில் உடனடி போர் நிறுத்தம்‘ – தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்த அமெரிக்கா

0

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகள் காஸாவில் ‘உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை தடை செய்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை செய்துள்ளது.

இந்தத் தீர்மானம், காசாவில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்மொழியப்பட்டிருந்தது.

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல்கள் தொடர்ந்து பல உயிரிழப்புகளையும், பெரும் அழிவையும் ஏற்படுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், பல நாடுகள் ஆதரவு தெரிவித்த இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்தது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ‘உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்தத்திற்கு’ ஆதரவாக வாக்களித்தன. என்றாலும், அமெரிக்கா அதன் வீட்டோ அதிகாரத்தின் ஊடாக குறித்த தீர்மானத்தை ரத்து செய்தது.

அமெரிக்காவின் வீட்டோ முடிவு குறித்து, தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளன. மேலும், காசாவில் மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் தேவை என சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights