உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ட்ரோன் தாக்குதலை (01.06.2025)) நடத்தியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதற்றங்களை அதிகரித்துள்ளது.
‘ஒபரேஷன் ஸ்பைடர் வெப் ‘ என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த நடவடிக்கையை மிகவும் இரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷ்ய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் இராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷ்ய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக ட்ரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.