உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ. பி. டி. பி) சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ. வீ.கே.சிவஞானம் யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இதனிடையே யாழ். மாநகர சபையில் ஜே.வி.பியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுகளை அவர் மறுத்துள்ளார்.இவ்வாறு வெளியான தகவல்கள் “கடும் கற்பனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.