பொலிஸ் துறை வரலாற்றில் என்றுமே மறக்கமுடியாதவர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரேமதாச உடுகம்பொல .ஒரு பொலிஸ் மா அதிபருக்கு இல்லாதசக்தி
1988-90 ஜே.வி.பி ஆயுதப்போராட்டம் ஜனாதிபதி பிரேமதாசவின்செல்லப்பிள்ளை.அவரிடம் எந்நேரமும் அனுமதியின்றி சென்றவர்.உடுகம்பொல என்றால் தெற்கில் கிடிக்கலக்கம். எங்கேயும் எந்நேரத்திலும் சென்றவர்.திகில் நிறைந்த சம்பவங்களுடன் தொடர்பானவர் என புகழ்பெற்றவர்.
டயர் எரிப்பு சூத்தரதாரியான இவருக்கு ஆயிரக்கணக்கான கொலைகளை முன்னெடுக்க ஜே.வி.பியினருக்கு எதிரான நடவடிக்கைகள் என பிரேமதாசஅரசினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ஜே.ஆரின் பாதுகாப்பு பிரிவிலும் பணியாற்றியவர்.1982 ஜே.ஆரின் சர்வசனவாக்கெடுப்புக்கு எதிராக பிக்கு ஒருவர் விநியோகித்த பிரசுரங்களை (ASP) பதவியில் பறித்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் பிக்குவுக்கு நட்ட ஈடும் ஜே.ஆரால் வழங்கப்பட்டது.உடுகம்பொல SP ஆக பதவி உயர்வு.
இவருக்கும் ஜனாதிபதி பிரேமதாசவுக்கும் ஏற்பட்ட தகராறால் 1992 ஜனவரி 16 கட்டாய லீவில் அனுப்பப்பட்டு இவரின் கீழ் இயங்கிய (BSO)-Bureau of Special Operation) மூடப்பட்டு ஆயுதங்களும் பறிக்கப்பட்டன.சட்டத்தரணி லியனாராயச்சி படுகொலை இவர் மீதும் வழக்கு.
கரும் பூனைகளால் (Black Cats) 1989 ஜனவரி- மார்ச் வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை சத்தியக்கடதாசி (Affidavit) மூலம் வெளியிட்டதை “அத்த” பத்திரிகை பிரசுரித்தது. அதன் ஆசிரியர் சுனாந்த தேசப்பிரியாவுக்கும் உடுகம்பொலவுக்கும் எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இப்படுகொலைகளை Sunday Times ஏப்ரல் 5, The Island ஏப்ரல் 8, லக்திவ, ராவய,யுக்திய பத்திரிகைகள் வெளியிட்டன. அவற்றின் ஆசிரியர்கள் ஊழியர்களும் சீ.ஐ.டியால் விசாரிக்கப்பட்டனர்.
கரும் பூனைகளில் ஆளும் ஐ.தே.கட்சி அரசியல்வாதிகளின் குண்டர்களே உள்ளனர் என இவர் கூறியதை “யுக்திய” பத்திரிகை வெளியிட்டது.
முடிந்தால் என்னைக்கைது செய்யுங்கள்! என பொலிசாருக்கு சவால் விட்டவர்.தன்னையும் கரும்பூனைகள் படுகொலை செய்துவிடுவர். நான் பிடிபட்டால் என் உடலில் சிறு துரும்பும் மிஞ்சாது.எரியும் ரயரில் சாம்பராவேன் என்றார்.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் இடம்பெற்ற சகல ஊழல்களுக்கும் கண்கண்ட சாட்சியாக நான் இருக்கிறேன்.கரும்பூனைகள் என்னை எந்த நேரமும் வேட்டையாடலாம் எனக்கூறியது மட்டுமல்லாமல், உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவிய எதிர்க்கட்சி தலைவி சிறிமாவோ மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இறந்த இவரது சகோதரரின் வீட்டுக்கு இராணுவ மேஜரான சகோதரருடன் வந்தும் பொலிசாரால் கைது செய்யமுடியவில்லை. மலையகம் உட்பட பல இடங்களிலும் இவரை பொலிசார் தேடினர்.
1988 ஜூலை 28 இவரது காலி வீட்டை சூறையாடி தாய் (75 வயது),
சகோதரர் ,மைத்துனி இரு குழந்தைகளை படுகொலை செய்ததற்கு பழிவாங்கவே ஜே.வி.பிக்கு எதிராக கொடூரமாக செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனால் அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்றார். மனைவி இலங்கை தூதரகத்தில் பணி.
மீண்டும் நாடு திரும்பி போதைப்பொருள் தடுப்பு பிரவு பணிப்பாளராகி கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கசிப்பு கள்ளச்சாரய வேட்டைகளை முன்னெடுத்தார். போதை பொருள் கடத்திய சிங்கப்பூர் கசினோ மன்னன் ஜோசிம் நாடு கடத்தப்பட்டார்.
இவரது அலுவலக மேசை லாச்சியில் பல கைக்குண்டுகள்,தோட்டாக்கள்,ஐ.நா. தடை செய்த வெடிமருந்துகள்,ஒருவரை கிட்டிய தூரத்தில் தாக்கிசேதமாக்கும் 38 பிரவுனிங்கில் ரிவோல்வர், வலது பக்கம் சப் மெசின் துப்பாக்கி,கதிரைக்கு அருகில் சிறிய யந்திர துப்பாக்கி,ஒரு கமாண்டோ கத்தி இருந்தாக (The Indian Express) நிருபர் குப்தா கண்டதாக தெரிவித்தார்.
“அவர்கள் எனக்கு இரக்கம் காட்டவில்லை! நானும் அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை” எனவும் The Indian Express பத்திரிகைக்கு கூறியிருந்தார்.
அத்துலத் முதலி,காமினி திசநாயக்காவுடன் தொடர்பு என சில பொலிஸ் அதிகாரிகள் ஜனாதிபதி பிரேமதாசவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்காமினியின் வழக்கு தொடர்பில் அவருக்கு உதவியமை என்பனவற்றால் ஜனாதிபதியின் உத்தரவில் நான் ஓய்வில் அனுப்பப்பட்டேன் என்றார்.
அன்றைய பொலிஸ் மா அதிபர் ஏர்னஸ்ட் பெரேரா ஒரு முஸ்லிம் வர்த்தகரிடம் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டபோது ஒரு லட்சம் ரூபா லஞ்சமாக பெற்றதாகவும் கூறினார்.
படகில் மீனவர் போல தூத்துக்குடிக்கு தப்பிச்சென்று சென்னையிலும் பின்னர் டில்லியிலும் தங்கினார்.இவருடன் ஜே.வி.பி.தலைவர் சோமவன்சவும்சென்றதாகவும் தமிழ் இயக்கம் உதவியதாகவும் சில தகவல். இந்திய உளவுப்பிரிவும் இந்திய தூதரகமும் இவருக்கு உதவியது.பெர்னாண்டோ என்ற பெயரில் கடவுச்சீட்டுடன் ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவுக்கு பின் 13 மாதங்களால் 24 ஜூன் 1993 நாடு திரும்பினார்.
தன்னை பிரேமதாச கொலை செய்வார் என ஒரு அமைச்சர் கூறியதால் இந்தியாவுக்கு தப்பிச்சென்றதாகவும் கூறினார். டி.பி.விஜயதுங்க ஜனாதிபதியானதும் இவருக்கு பொது மன்னிப்பளித்து துறைமுகங்கள் அதிகாரசபை உயர் பதவியை வழங்கினார்.நான்குஅதிரடிப்படையினர் பாதுகாப்பு.ரணில் பிரதமர்.
உயர் நீதிமன்றில் இவர் சமர்ப்பித்த சத்தியக்கடதாசியால் இவருக்கும் சில பத்திரிகைகளுக்கும் எதிரான வழக்குகளும் மீளப்பெறப்பட்டன.
அமெரிக்காவில் குடியேற விண்ணப்பித்தபோது அவருக்கு எதிராக பிரேமதாச தெரிவித்த குற்றச்சாட்டால் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக அங்கு வாழும் மகள் அங்குள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடியானது.
ஈவிரக்கமற்ற மிக மோசமான சித்திரவதைகளையும் மனித உரிமை மீறல்களையும் DIG உடுகம்பொல புரிந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள்.ஆனால் எதுவித விசாரணைகளும் இடம்பெறவில்லை.
உடுகம்பொலவுக்கு பின் பொலிஸ் மா அதிபர் தேசபந்து உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் மீது கொலை லஞ்சம் உட்பட பல வழக்குகள்
பலபொலிஸ்அதிகாரிகள் வெளிநாடுகள் தப்பிச்சென்றுள்ளனர்.
1994 சந்திரிகாவுக்கும்,பின்னர் மகிந்தவுக்கும் ஆதரவளித்தார்.
சப் இன்ஸ்பெக்டராக இணைந்து பதவி உயர்வுகளை பெற்று 84 வது வயதில் 2019 காலமானார்.இவரைப்பற்றி பலரும் பலதை எழுதியுள்ளனர்.
நன்றி—ரூபன் மாரியராஜன்—-