ஜப்பானில் நிலநடுக்கம்

0

மியன்மாருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூஷு பகுதியில் இலங்கை நேரப்படி  இரவு 7:34 மணிக்கு 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS)  கூற்று படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கத்தின் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.முன்னதாக, மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. மீட்புப்பணிகள் நடந்து வரும் நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000 த்தை தாண்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights