வாழ்க்கைப் பயணமும் காலத்தின் நியாயமும்!

0
திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி (முன்னாள் எம்பி) அவர்களுக்கு 2006 ஆண்டுக்கான உலக சமாதானம் வன்முறை தவிர்ப்பு ஆகியவற்றிற்காக யுனெஸ்கோ பரிசு கொடுத்து கௌரவப்படுத்திய நிகழ்வு நடந்தது.
புலிகளுக்கு எதிராக அவர் மேற்கொண்ட தொடர் சமாதான முயற்சிக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டது!
பல தடைவைகள் திரு ஆனந்த சங்கரி அவர்களை தேடி எம்பி அமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் வந்தன.
அவற்றை அவர் ஏற்கவில்லை!
பதவிக்காக எந்த தூரமும் செல்ல தயாராக இருக்கும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் திரு ஆனந்தசங்கரி அவர்கள் தனித்துவமாகத்தான் தெரிகிறார்
புலிகளின் ஹிட் லிஸ்டில் அவர் இருந்ததால் ஏனையோரின் தாராளமான விமர்சனங்களை இப்போதும் கூட அவர் எதிர்கொள்கிறார்.
ஆபத்தில்லாத இடத்தில தாராளமாக கோபமும் விமர்சனமும் வரும்தானே?
உதாரணமாக இன்று ரணில் விக்கிரமசிங்காவை வகை தொகை இன்றி சாடுவோர் தப்பி தவறியும் ராஜபக்சக்களை நோக்கி சுண்டு விரலையும் ஆசைப்பதில்லை..
(இதே போன்றொதொரு நிலைதான் தமிழகத்திலும்எம்ஜியார் ஜெயலலிதா என்ற பெயர்களே உச்சரிக்க பயப்படுவோர்க்ள தாராளமாக கலைஞர் பெயருக்கு சேறு வாரி வீசுவார்கள்)
இப்போது கனடிய அமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ஆனந்தசங்கரி அவர்களின் மகன் திரு கரி ஆனந்த சங்கரி அவர்கள் தாராளமாக விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான்!
ஆனால்,
1983 இல் அகதியாக வந்து சேர்ந்த நாட்டின் நீதி அமைச்சராகவும் அந்நாட்டின் சட்டமா அதிபராகவும் இன்று உயர்ந்திருப்பது நிச்சயம் பாராட்டுக்கு உரியதுதான்!திரு ஆனந்தசங்கரி அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் புலிகளால் வேட்டை ஆடப்பட்டு காணாமல் போனவர்கள்தான்!
புலிகளால் துரோகி என்று கொல்லப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் பேரன் டொரோண்டோ மாநகரின் தலைமை போலீஸ் அதிகாரி புலிகளால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட ஆனந்தசங்கரி அவர்களின் வாரிசு இன்று அதே டொரோண்டோ எம்பி கனடா , அமைச்சர், சட்டமா அதிபர்!
காலம் எப்படி கணிக்கிறது பார்த்தீர்களா?

 

முகநூலில் இருந்து

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights