இது 1987 – 1990 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடம்

0
இது 1987 – 90 காலப்பகுதியில் பியகமவில் செயல்பட்டிருந்த பட்டலந்த வதைக்கூடத்தின் புகைப்படமாகும்.
புகைப்படத்தின் நடுவில் இருப்பவர், பயங்கர காலத்தில் கைது செய்யப்பட்டு வதைக்கூடத்திற்கு கொண்டுவரப்பட்ட கைதியாவார்.
இரு பக்கங்களிலும் ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள், அரச பாதுகாப்பு படையினருக்கு உட்பட்டவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாக தெரியும்.இவர்கள், அற்கால காபினட் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பரான போலீஸ் அதிகாரி டக்லஸ் பீரிஸின் இரு மகன்கள்.
கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் கை, கால்களை உடைத்து சித்திரவதை செய்வது இவர்கள் மேற்கொண்ட ஒரு விளையாட்டு என எடுத்துக் கொள்ளலாம்.பின்னாளில் ஆட்சி மாற்றத்துடன், டக்லஸ் பீரிஸ் இங்கிலாந்திற்குத் தப்பிச் சென்றார்.பின்னர் நீதிமன்றத்தின் சிறப்பு நடவடிக்கையால், அவர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, பட்டலந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும்,
சந்திரிகா குமாரதுங்க அரசின் அலட்சியம் காரணமாக, அந்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.
டக்லஸ் பீரிஸ் பின்னர் உயிரிழந்தார்.
அவர் மகன்கள் இருவரும் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவன் அங்கே தீ விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டக்லஸ் பீரிஸின் நெருங்கிய நண்பரான அந்த காபினட் அமைச்சர், இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ஆனார்.
அந்த காலத்தில் ரணிலின் குற்றங்களை அம்பலப்படுத்த வந்த சந்திரிகா குமாரதுங்க, தற்காலத்தில் ரணிலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த மறைமுகமாக உதவி செய்தார்.
அந்த காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசு, 1987ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலைப் முண்ணனியை (JVP) இரத்தமும் இரும்பும் கொண்டு அடக்க முயற்சிகள் மேற்கொண்டது.
மாத்தறையில் H.R. பியசிறி,
வட மத்திய மாகாணத்தில் நெல்சன், M.S. அதிகாரி, மஹிந்தசோம,
களுத்துறையில் ரணவக்க,
காலியில் M.S. அமரசிறி,
குருநாகலில் காமினி ஜயவிக்ரம பெரேரா,
ஹலாவத்த, புத்தளம் பகுதிகளில் பெப்டஸ் பெரேரா, ஜான் அமரதுங்க, ஜோசப் மைக்கேல் பெரேரா,
கம்பஹாவில் போல் பெரேரா,
இவர்கள் ஒவ்வொருவருக்கும் J.R. ஜெயவர்தன அரசு அதிகாரங்களை வழங்கியது.
பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அடக்குமுறையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தது.
1987 ஆம் ஆண்டில், பட்டலந்த வதைக்கூடத்தை நிறுவியது அவரே.
அதற்காக, கொழும்பிற்கு அருகில் இருந்த சில அரசியல் ஆதரவாளர்களின் கட்டளைக்கிணங்கி, எந்தவொரு தீவிர செயலும் செய்யத் தயங்காத காவல்துறையினரை தேர்ந்தெடுத்தார்.
அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராக கான்ஸ்டபிள் டக்லஸ் பீரிஸ் இருந்தார்.
அவர் ஒரு மனித உருவை உடைய மிருகம் எனக் கூறலாம்.
பட்டலந்த வதைக்கூடத்தின் தலைவராக, ரணில் விக்ரமசிங்கவினால் டக்ளஸ் பீரிஸ் உயர் காவல் துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இதற்காக காவல்துறை விதிகளையும் சட்டங்களையும் முற்றிலும் மீறப்பட்டது.
இந்த பதவி உயர்வுக்கு R. பிரேமதாச, ஜோசப் மைக்கேல், ஜான் அமரதுங்க ஆகியோர் முக்கிய பங்கை வகித்தனர்.
பட்டலந்த வத்காகாரத்திற்குக் கொண்டுவரப்பட்ட 5000க்கும் மேற்பட்ட தேசப்பற்றுள்ள பொதுமக்களை கொலை செய்ய, ரணிலின் நேரடி கட்டளையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த கொடூர கொலைகள் மேற்கொண்ட முக்கிய நபர், இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தைகளின் தந்தையான டக்லஸ் பீரிஸ்தான்.
2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டார் என்ற ஒரே வாதத்தை வைத்து ரணிலை மாபெரும் புத்திசாலியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஆனால் அவர் நாட்டை மீட்டார் என்பதை விட நாட்டின் பல விலைமதிப்பற்ற இடங்களையும், சொத்துக்களையும் விற்று நாட்டை மீட்டார் என்று கூறுவது சாளச் சிறந்தது என நினைக்கிறேன்.
எது எப்படியோ ரணிலின் ஆரம்ப கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பல அப்பாவிகளின் இரத்தக் கறைகள் அவர் ஆடையில் பதிந்து தான் இருக்கிறது.
எவ்வளவு நல்லவனாக நீங்கள் அவரை சித்தரிக்க முயன்றாலும் அவர் ஓர் சிறிய ஹிட்லர் தான்.
நன்றி: சமூக வலைத்தளம்
Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights