இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. காலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 257 மற்றும் 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 414 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அணி 75 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்தது. அவுஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
14 ஆண்டுகளில் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக ரிக்கி பொண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு 1-0 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய அலெக்சு கேரிக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.