போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

0

போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 607  பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கிய இந்த நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 190 சாரதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights