ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு

0

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷ்யா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று (17) ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வன்முறையற்ற சாதாரணப் போதைப் பொருள் குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதாக ஜோபைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights