யாழ்ப்பாணத்தின் அனுமதியுடன் சுண்ணாம்புக் கல் அகழ்கிறோம் என்று சொன்னால் நமது எதிர்காலச் சந்ததியிற்கு கடல் நீரை ஊரிற்குள் வரவேற்று நாசம் செய்கிறோம் என்று அர்த்தம்.
அரச அனுமதி என்பது புவியில் அடிப்படை ஆய்வுடன் கொடுக்கப்படுகிறதா என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும்.யாழ்ப்பாணம் கடலால் சூழ்ந்த பிரதேசம்; அப்படியிருப்பினும் எப்படி நன்னீர் வளம் இருந்தது என்பதற்கு விஷேச புவியியல் அமைப்புக் காரணமாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நிலவியல் அமைப்பு
நிலத்தின் அடியில் நீரினை சேமித்து வைக்கும் பூமியின் பாகத்தினை ஆங்கிலத்தில் aquifer என்றும் தமிழில் நீர்கொள் படுக்கை என்று கூறலாம். இந்த படுக்கை நீர் உட்புகக்கூடிய கற்களால் அல்லது கிரவல், மணல் போன்ற நுண்ணிய துநிக்கையால் ஆக்கப்படிருக்கும். இவற்றினை குறித்த நாடுகளுக்கு ஏற்ப நீர் ,நிலவியல் அறிவியலாளர்கள் வகைப்படுத்தி இருப்பார்கள். இந்த வகையில் இலங்கையில் காணப்படும்.
நீர்ப்படுக்கைகளை ஆறுவகையாக (C.RPanboke, என்ற அறிவியலாளர்) வகைப்படுத்தி இருக்கிறார். இந்த ஆறுவகை நீர்ப்படுக்கைகளில் யாழ்ப்பாணத்தில் காணப்படும் நீர்ப்படுக்கை மிக விசேடமானதும், தனித்துவமானதுமான ஒன்றாகும். இதனை Shallow Karstic Aquifer என்று குறிப்பிடுவர். இதனை தமிழில் ஆழமற்ற துவாரங்கள் கொண்ட நீர்ப்படுக்கை என தமிழில் கூறலாம்.
முழு யாழ் குடாநாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை. இதனால்தான் நிலாவரை கிணறு வற்றாமல் நீர்கிடைப்பது, நிலாவரை கிணற்றில் எலுமிச்சை போட்டால் கீரிமலை கேணியில் கிடைக்கும் என்ற ஊர்வழக்கு கதைகளில் உள்ள உண்மை இதுதான்.
இந்தப் பாறையெல்லாம் அனுமதி பெற்று உடைத்துக்கொண்டிருந்தால் கடல் உள்ளுக்குள் வந்தால் பிறகு ஆப்பிழுத்த குரங்கு மாதிரி கதை பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
ஏற்கனவே எண்ணைக் கழிவு மாசு, விவசாய இரசாயன மாசால் பாதிப்புற்றிருக்கும் யாழ்ப்பாண நிலத்தடி நீரிற்கு கடல் நீரையும் வரவேற்கும் அரிய முயற்சி இந்த சுண்ணாம்புக்கல் அகழ்வு
பொறியியலாளர் திரு. சிவகுமார் கருத்து!( FB )
