கனேடிய அரசாங்கம் – உலகளவில் 11 மொழிகளில் வெளியிட்டுள்ள எச்சரிக்கை விளம்பரம்!

0

கனடாவில் இனி புகலிடக் கோரிக்கை பெறுவது என்பது எளிதான விடயம் அல்ல என, அந்நாட்டு அரசாங்கம் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை விடுத்துள்ளது.

இதன்படி, சுமார் 178,662 டொலர்கள் செலவில் தமிழ், இந்தி, உருது, ஸ்பேனிஷ் உட்பட 11 மொழிகளில் இந்த எச்சரிக்கை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை கனேடிய மக்களிடையே செல்வாக்கு குறைந்து வரும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின், அரசியல் தந்திரம் என ஒரு சில தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த விளம்பரத்தில், கனடாவில் இனி புகலிடம் கோருவது எளிதல்ல.

தகுதி பெற கடுமையான வழிமுறைகள் உள்ளன.

முடிவெடுக்கும் முன்னர் அவை தொடர்பில் நன்கு தெரிந்துகொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்கிவரும் கனேடிய அரசு, தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights