மதுபான அனுமதிபத்திர விவகாரம்

0

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பட்டியல் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்ப்பட்டியல் அனைத்து மக்களுக்காகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பட்டியலுடன் அவர்களை பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கோரியிருந்தார்.

இதன்படி, ரோஹித அபேகுணவர்தனவின் கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

Verified by MonsterInsights