இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளது
அதாவது 10:1 என்ற விகிதத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது.குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கின்றது.வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவம் வசம் இருக்கின்றது
முல்லைத்தீவில் 1,578.27 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளார்கள்
கிளிநொச்சியில் 4,378.8 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர்
யாழ்ப்பாணத்தில் 3,300 ஏக்கர் காணியில் இராணுவம் தங்கியுள்ளது
இது தவிர யாழ்ப்பாணத்தில் 68 இடங்களில் தங்களின் நிரந்தர முகாம்களுக்கு காணி பெற்று கொள்ள முயற்சி செய்கின்றார்கள்
வவுனியா மாவட்டத்தில் 1,021.55 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்ப்பட்டுள்ளது
மன்னாரில் 130.77 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளடங்கலான கிழக்கு மாகாணத்தில் 8,457 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்திடம் இருக்கின்றது
ஆனால் நியத்தில் மேற்படி அரச செயலங்களின் புள்ளி விவரங்களுக்கும் அதிகமான நிலங்களை வசப்படுத்தியிருக்கின்றார்கள்Oakland Institute யின் ஆய்வறிக்கையில் வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் நிலங்கள் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,910 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது என Oakland ஆவணப்படுத்தியுள்ளது.இதில் வன பகுதிகள் உள்ளடக்கப்பவில்லை.அடையாளம் ஆய்வு நிறுவனம் வன பகுதிகளையும் உள்ளடக்கிய தனது ஆய்வில் முல்லைத்தீவில் 30,000 ஏக்கர் நிலம் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லுகின்றது
உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் A9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1,702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது.அது பற்றி கணக்கில்லை.
வன்னியின்மிக வளமான பொருளாதார ஆதாரமான சகல விவசாய பண்ணைகளும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்று வரை இருக்கின்றது.முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாய பண்ணைகளிலிருந்து மட்டும் இராணுவம் வருடாந்தம் 15 மில்லியன் மற்றும் 13 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.பொருளாதாரம் சார்ந்து வேறு மாற்றுத் தெரிவில்லாமல் முன்னாள் போரா*ளிகளை இராணுவ பண்ணைகளில் வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.
இது போதாதென்று வடக்கின் முன்பள்ளி கட்டமைப்பும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது.இவை இராணுவமயமாக்கலின் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன
வடக்கின் 3,152 முன்பள்ளி ஆசிரியர்களில் 481 ஆசிரியர்கள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு கட்டளை பிரிவின் கீழ் பணியாயாற்ருக்கின்றார்கள்.அதாவது கிளிநொச்சியில் 303 பேர், முல்லைத்தீவில் 366 பேர் யாழ்ப்பாணத்தில் 12 பேர் இராணுவ நிருவாகத்தின் கீழ பணியாற்றி வருகின்றார்கள்.இவ்வாறு மோசமாக செறிவாக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வடக்கு கிழக்கு சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றார்கள்.சிங்கள குடியேற்றங்கள்,பௌத்தமயமாக்கல் என சகல அத்துமீறல்களுக்கும் துணை நிற்கின்றார்கள்.
உதாரணமாக குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் மட்டும் பௌத்த பிக்குகள் உட்பட பல்வேறு தரப்பால் 41,164 ஏக்கர் நிலம் இராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள்ளது
அதே போல முல்லைத்தீவில் மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள் 80,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவ ஒத்துழைப்புடன் ஆக்கிரமித்துள்ளது.இது போதாதென்றுஇராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் தான் தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கை ஆக்கிரமிக்கின்றார்கள்
ஒரு சில தமிழ் கட்சிகளின் வேட்பளர் தெரிவு வரைகளில் கூட இராணுவ தலையீடு இருக்கிறது
கடந்த தடவை வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட 3 பாராளமன்ற உறுப்பினர்கள் இராணுவ துணைப்படையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.உண்மையில் உயர் கல்வி நிறுவனமான பல்கலை கழகத்தின் துணைவேந்தரை தீர்மானிக்கும் இடம் வரை இராணுவம் ஆதிக்கம் செலுத்துகின்றது.
ஆகவே மேற்படி மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும் விட்டு கொடுப்பு என்கிற பேச்சே இதில் இருக்க முடியாது.இதில் வெறும் வாக்கரசியல் செய்ய முடியாது
ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட இராணுவம் மாற்றமின்றி மிக செறிவாக நிறுத்தப்பட்டிருக்கும் அவலத்தை மறைத்து சிலர் வெற்று அரசியல் செய்ய பார்க்கின்றார்கள்.